Category Archives: Nakshatras

பூசம் நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்

lord siva

பொருவிடை ஒன்றுடைப் புண்ணிய
மூர்த்திப் புலி அதளன்
உருவுடை அம்மலைமங்கை
மணாளன் உலகுக்கு எல்லாம்
திருவுடை அந்தணர் வாழ்கின்ற
தில்லை சிற்றம்பலவன்
திருவடியைக் கண்ட கண்கொண்டு
மற்று இனிக் காண்பது என்னே.

புனர்பூசம் நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்

Lord Shiva2

மன்னும் மலைமகள் கையால்
வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப்பொருள்
ஆயின தூக்கமலத்து
அன்னவடிவின அன்புடைத்
தொண்டர்க்கு அமுது அருத்தி
இன்னல் களைவன இன்னம்பரான்
தன் இணை அடியே.

திருவாதிரை/ஆதிரை நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்

Lord Shiva Parvati Ganesha

கவ்வைக் கடல் கதறிக் கொணர்
முத்தம் கரைக்கு ஏற்றக்
கொவ்வைத் துவர் வாயார்
குடைந்து ஆடும் திருச்சுழியல்
தெய்வத்தினை வழிபாடு செய்து
எழுவார் அடி தொழுவார்
அவ்வத் திசைக்கு அரசு
ஆகுவர் அலராள் பிரியாளே.

மிருக சீரிடம் நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்

Lord Shiva Parvati 12_Lingams

பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

ரோகிணி நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்

lord shiva chalisa in english

எங்கேனும் இருந்து உன்
அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்து என்னோடும்
உடன் ஆகி நின்றருளி
இங்கே என் வினையை
அறுத்திட்டு எனை ஆளும்
கங்கா நாயகனே
கழிப்பாலை மேயோனே.

கார்த்திகை/கிருத்திகை நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்

lord shiva tandav dance HD wallpapers

செல்வியைப் பாகம் கொண்டார்
சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணியோடு
மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரை இலாத
காஞ்சி மாநகர் தன்னுள்ளார்
எல்லிய விளங்க நின்றார்
இலங்கு மேற்றளியனாரே.

பரணி நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்

My Masti Mobile-SivaRatri_Lord Siva
கரும்பினும் இனியான் தன்னைக்
காய்கதிர்ச் சோதியானை
இருங்கடல் அமுதம் தன்னை
இறப்பொடு பிறப்பு இலானைப்
பெரும்பொருள் கிளவியானைப்
பெருந்தவ முனிவர் ஏத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம்
அழகிதாம் நினைந்தவாறே.

அசுவினி நட்சத்திரத்துக்குரிய தேவாரப் பாடல்

lord shiva chalisa

தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து
உந்தன் சரண் புகுந்தேன்
எக்கால் எப்பயன் நின் திறம்
அல்லால் எனக்கு உளதே
மிக்கார் தில்லையுள் விருப்பா
மிக வடமேரு என்னும்
திக்கா! திருச்சத்தி முற்றத்து
உறையும் சிவக்கொழுந்தே.

27 Nakshatras and Their Gods

27 Nakshatras and Their Gods


 

நட்சத்திரங்கள் வழிபட வேண்டிய தெய்வம்
அஸ்வினி ஸ்ரீ சரஸ்வதி தேவி
பரணி ஸ்ரீ துர்கா தேவி
(அஸ்ட புஜம்)
கார்த்திகை ஸ்ரீ சரஹணபவன்
(முருகப் பெருமான்)
ரோகிணி ஸ்ரீ கிருஷ்ணன்.
(விஷ்ணு பெருமான்)
மிருகசீரிடம் ஸ்ரீ சந்திர சூடேஸ்வர்
(சிவ பெருமான்)
திருவாதிரை ஸ்ரீ சிவபெருமான்
புனர்பூசம் ஸ்ரீ ராமர்
(விஸ்ணு பெருமான்)
பூசம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி
(சிவபெருமான்)
ஆயில்யம் ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
மகம் ஸ்ரீ சூரிய பகவான்
(சூரிய நாராயணர்)
பூரம் ஸ்ரீ ஆண்டாள் தேவி
உத்திரம் ஸ்ரீ மகாலக்மி தேவி
ஹஸ்தம் ஸ்ரீ காயத்திரி தேவி
சித்திரை ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
சுவாதி ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
விசாகம் ஸ்ரீ முருகப் பெருமான்
அனுசம் ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்
கேட்டை ஸ்ரீ வராஹ பெருமாள்
(ஹயக்கிரீவர்)
மூலம் ஸ்ரீ ஆஞ்சனேயர்
பூராடம் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்
(சிவபெருமான்)
உத்திராடம் ஸ்ரீ வினாயகப் பெருமான்
திருவோணம் ஸ்ரீ ஹயக்கிரீவர்
(விஷ்ணுப் பெருமான்)
அவிட்டம் ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள்
(விஷ்ணுப் பெருமான்)
சதயம் ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர்
(சிவபெருமான்)
பூரட்டாதி ஸ்ரீ ஏகபாதர்
(சிவபெருமான்)
உத்திரட்டாதி ஸ்ரீ மகா ஈஸ்வரர்
(சிவபெருமான்)
ரேவதி ஸ்ரீ அரங்கநாதன்